சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதி இலங்கைக்கு விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ள இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, கீதா கோபிநாத் இலங்கை அரசாங்க அதிகாரிகள், மத்திய வங்கி ஆளுநர், மற்றும் பிற பங்குதாரர்களுடன் சந்திப்பு நடத்தி, IMF இன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (Extended Credit Facility) மற்றும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கீதா கோபிநாத்
கலாநிதி கீதா கோபிநாத், 2022 ஜனவரி 21 முதல் IMF இன் முதல் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்னர், 2019 முதல் 2022 வரை IMF இன் தலைமை பொருளியலாளராக பணியாற்றினார்.
சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் சீர்திருத்தத் திட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நேரத்தில் நடைபெறும் இந்த மாநாடு, பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மை, கடன் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தை அடைவதில் இலங்கையின் அனுபவங்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
