இலங்கை அந்நிய செலாவணி கையிருப்பு 79 வீதத்தால் குறைந்துள்ளது
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சிக்கு கோவிட்-19 தொற்று நோய் மாத்திரம் காரணமல்ல என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏனைய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது, தொற்று நோய்க்கும் இடையில் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளதுடன் இலங்கையில் மாத்திரமே குறைந்துள்ளது.
இலங்கை கடந்த 2019 ஆம் ஆண்டு பயன்படுத்தக் கூடிய அந்நிய செலாவணி கையிருப்பாக 7 ஆயிரத்து 642 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்துள்ளன. அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் ஆயிரத்து 579 மில்லியனாக குறைந்துள்ளது.
தொற்று நோய் காரணமாக அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்திருக்குமாயின் ஏனைய ஆசிய நாடுகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். எனினும் அப்படி நடக்கவில்லை.
2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு இறுதி வரையான தொற்று நோய் காலத்தில் பங்களாதேஷின் அந்நிய செலாவணி கையிப்பு 41 வீதமாகவும் இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு 39 வீதமாகவும் பூட்டானி அந்நிய செலாவணி கையிருப்பு 35 வீதமாகவும் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 33 வீதமாகவும் அதிகரித்துள்ளது.
இந்த காலப் பகுதியில் இலங்கை தனது அந்நிய செலாவணி கையிருப்பை 79 வீதமாக குறைத்துக்கொண்டுள்ளது.
பப்லிக் பைனான்ஸ் என்ற இந்த இணையத்தளம் இந்த செய்திக்காக இலங்கை,பங்களாதேஷ், இந்தியா, பூட்டான், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளின் அறிக்கைகளை ஆய்வு செய்துள்ளது.