கட்டுநாயக்க விமான நிலையத்தில் முதல்முறையாக E-Gate - வசதிகள் தொடர்பில் வெளியான தகவல்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நிறுவப்பட்ட தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று பிற்பகல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது E-Gate மூலம் தற்போது 40 வினாடிகளில் குடிவரவு நடைமுறைகளை முடிக்க முடியும் என தெரியவந்துள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், சர்வதேச இடம்பெயர்வு அமைப்பினால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
E-Gate வசதிகள்
விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம், குடிவரவு திணைக்கள நடைமுறைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் பயணிகள் வெறும் 40 வினாடிகளுக்குள் குடிவரவு நடைமுறைகளை நிறைவு செய்து விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.
மேலும் இந்த E-Gate அமைப்பில் தொற்று நோய்களைக் கண்டறியும் நவீன வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை பிரஜைகளுக்கு
தற்போது இந்த வசதி இலங்கை பிரஜைகளுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

இது விமான நிலையத்தின் செயல்திறனை பெருமளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் அனைத்து பயணிகளுக்கும் இந்த வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.