இலங்கையின் முயற்சிகள் அர்த்தமுள்ளதாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும் - ஐநா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா
இலங்கை தொடர்பான ஜெனீவா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையை நடைமுறைப்படுத்தும் இலங்கையின் மூலோபாயத்தை அமெரிக்கா கோரியுள்ளது.
ஜெனீவாவில் உள்ள அமெரிக்க அலுவலகத்தை சேர்ந்த டேனியல் க்ரோனென்ஃபெல்ட், இன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கரிசனைகளை அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது. அத்துடன் மனித உரிமைகள் பேரவை அறிக்கையின் பரிந்துரைகளைச் நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தையும் கால அட்டவணையையும் இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை குறித்த அறிக்கை தொடர்பான உரையாடலின் போது அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
சிறுபான்மை சமூகங்கள் ஓரங்கட்டப்படுதல் மற்றும் சுயாதீன ஊடகங்கள் உட்பட சிவில் சமூகத்திற்கான இடத்தை கட்டுப்படுத்துவது போன்ற செயல்கள் குறித்து அமெரிக்கா கவலை கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதல் காலத் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு உயர் மட்ட நியமனங்கள் வழங்கப்பட்டமை உட்பட, இலங்கையின் பொறுப்புக்கூறல் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் எழுப்பப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் அர்த்தமுள்ளதாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும் என்று க்ரோனென்ஃபெல்ட் கூறியுள்ளார்.
அதேநேரம் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு அர்த்தமுள்ள, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் க்ரோனென்ஃபெல்ட் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறல் விடயங்களில் முறையான செயற்பாடுகள் இல்லை. இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுக்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையை முழுமையாக அமுலாக்குவதற்கான நேரஅட்டவணையை உள்ளடக்கிய திட்ட அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் நட்டயீட்டு அலுவலகம் என்பனவும் அரசியல் தலையீடுகள் இன்றி இயங்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் பிரதிநிதி டேனியல் வலியுறுத்தியுள்ளார்.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
