இலங்கையின் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியடையும்! - ADB எச்சரிக்கை
Sri Lanka
Economy
Asian Development Bank
Sri Lanka Economic Crisis
By Murali
2022ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரலாறு காணாத வீழ்ச்சியை அடையலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது.
வருடாந்த அறிக்கையான 'Asian Development Outlook' ஐ மேற்கோள் காட்டி, இலங்கையின் GDP வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 2.4% ஆக குறையும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, தெற்காசியாவில் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும். 2023ல் இது 2.5% ஆக சற்று உயரலாம் என்றும் கணித்துள்ளது.
இந்த ஆண்டு தெற்காசியாவில் மிக உயர்ந்த பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை மாற உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இலங்கையில் பணவீக்கம் 13.3% ஆக உயரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US