இலங்கையின் பாதுகாப்பு நங்கூரம் இந்தியா : மிலிந்த மொரகொட
இந்தோ-பசிபிக் சூழலில் இலங்கையின் பாதுகாப்பு நங்கூரம் இந்தியாவாகும் என்று இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2022 நெருக்கடிக்குப் பிறகு பொருளாதார ஸ்திரத்தன்மையை கொழும்பு எதிர்பார்க்கும் நிலையில், 2024 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் வருவதை நிராகரிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை-இந்திய உறவு
கொழும்பு புதுடில்லியுடன் ஒரு சிறப்பு உறவைப் பகிர்ந்து கொள்கிறது, அதனை ஏனைய நாடுகளின் இருதரப்பு உறவுகளுடன் ஒப்பிட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தனது மூலோபாய இருப்பிடம் மற்றும் இந்திய நிலப்பகுதிக்கு அருகாமையில் இருப்பதால், கொழும்பின் பாதுகாப்பு நலன்கள் புதுடில்லியின் நலன்களுடன் இணைந்திருப்பதாக நம்புகிறது, அதனால்தான் இலங்கை, இந்தியாவை "நங்கூரம்" என்று அடையாளப்படுத்துகிறது.இலங்கை "வாழக் கற்றுக்கொண்டது" என்றும் கூறியுள்ளார்.
மேலும், இலங்கை இந்தியாவுடன் தெளிவாக வேலை செய்கிறது, பாதுகாப்பு நலன்கள் என்று வரும்போது, இந்தியாவின் பாதுகாப்பும் இலங்கையின் பாதுகாப்பும் ஒன்றுதான், அது தர்க்கரீதியானது எனவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட மதிய உணவுச் சந்திப்பை மேற்கொண்டதாகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் காலை உணவை உட்கொண்டதாகவும், வெளிவிவகார அமைச்சருடன் தனிப்பட்ட முறையில் இரவு உணவருந்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா, இலங்கை உறவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இது காட்டுகிறது என்று மொரகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து, திவால் நிலையை நோக்கிச் செல்லும் போது, அதானி குழுமம்தான் அதைக் காப்பாற்றியது, மற்ற முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஊக்குவித்தது என்று மொரகொட கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
