டொலரை விட ரூபாவின் பெறுமதி அதிகரித்தால் இலங்கை மீது அமெரிக்கா குண்டு வீசுமென எச்சரிக்கை
அமெரிக்க டொலரை விட இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தால் ஏற்படும் விளைவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தேசிய மக்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா குண்டு வீசும்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க டொலரை விட இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தால் அமெரிக்கா எம்மீது குண்டுகளை வீசும்.
பொருட்களில் விலை குறைவடைவதாக கூறினால் கடந்த வருடம் காணப்பட்ட விலைக்கு குறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி குறையவில்லை.

முன்னர் 33 ரூபாவிற்கு காணப்பட்ட சவர்க்காரத்தின் இன்றைய விலையை ஒப்பிட்டு பார்க்கையில் விலை குறைந்துள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா என வினவியுள்ளார்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam