வலுவடையும் ரூபாவின் பெறுமதி! ஏற்பட்டுள்ள மாற்றம் - மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
இன்றைய தினத்திற்கான (15.05.2023) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 306.18 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 319.96 ரூபாவாக காணப்படுகிறது.
ஸ்ரேலிங் பவுண்ட்
ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 380.54 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை விற்பனை பெறுமதியானது 400.14 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால்
குவைத் தினாரின் பெறுமதியானது 1020.84 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 85.93 ரூபாவாக காணப்படுகிறது.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்த அன்றைய தினத்திற்கான நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 322.70 ரூபாவாகவும், கொள்வனவு விலை 308.66 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |