ரூபாவின் பெறுமதி உண்மையில் வலுவடைகிறதா..! அரசாங்கம் கூறும் பொய் : டில்வின் சில்வா
ரூபாவின் பெறுமதி பலமாக இருப்பதாக அரசாங்கம் கூறுவது பொய்யானது என ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜேவிபி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கை தேர்தலை நடத்துவதற்கு போதிய பணமில்லாத நாடாக மாறி யுள்ளதாகவும், தற்போது திடீரென அரசாங்கம் ரூபாய் பலமாக உள்ள தாக கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கான குறிப்பிட்ட திகதியை தேர்தல் கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும் டில்வின் சில்வா மேலும் கூறினார்.
டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் தினசரி நாணயமாற்று விகிதங்களின்படி, கடந்த வார இறுதியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
டொலரின் மதிப்பு குறையும் போது, ரூபாயின் மதிப்பு மேலும் வலுப்பெறும் என நாடு கருதுகிறது. உண்மையில் இது இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஏனென்றால், பொருட்களின் விலை குறையும், பணவீக்கம் குறையும், வங்கிக் கடன் வட்டியும் குறையும் என்பதை அது குறிக்கிறது. தற்போது, பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam
