இலங்கையில் அரசியல்வாதிகளின் வீடுகளை மையப்படுத்தி அமைக்கப்படும் புதிய வீதிகள்
இலங்கையில் 100,000 கிலோமீட்டர் வீதித்திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்படும் எல்லா வீதிகளும் பொதுவில் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கான இலக்கை மையப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் 100,000 கிலோமீட்டர் வீதித் திட்டத்தின் கீழ் தேசிய, மாகாண மற்றும் கிராமப்புற வீதிகள் புனரமைக்கப்படுகின்றன.
கோட்டாபய ராஜபக்சவின் திட்டங்கள்
இந்த வீதி அமைப்பு ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து செயற்படும் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது திறைசேரிக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ஐந்தாண்டுத் திட்டமாக இருந்தாலும், 2022 ஆம் ஆண்டின் மத்தியில் நாட்டின் நெருக்கடிக்கு காரணமாக திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வீதி அமைப்புக்களின்போது தனியார் வீதிகளும் கூட அரச செலவில்
புனரமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 2021 ஏப்ரல் வரை, இந்த திட்டத்தினால் ஏற்பட்ட இழப்பு சுமார் 30,000
மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது