சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம் : டிலான் கடும் எச்சரிக்கை

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Dilan Perera NPP Government
By Rakesh May 08, 2026 06:36 AM GMT
Report

இலங்கை அரசின் முறைகேடான டெண்டர் நடைமுறைகள் மற்றும் ஊழல்கள் காரணமாக, சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று(07.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய நிர்வாகச் சீர்கேடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

கபில சந்திரசேன உயிர்மாய்ப்பு : பொலிஸ் தரப்பில் வெளியான தகவல்

கபில சந்திரசேன உயிர்மாய்ப்பு : பொலிஸ் தரப்பில் வெளியான தகவல்

டெண்டர் நடைமுறையில் இழைக்கப்பட்ட அநீதி 

நாட்டில் தற்போது நிலவும் கடும் கடவுச்சீட்டு தட்டுப்பாட்டுக்கு அரசின் தன்னிச்சையான தீர்மானங்களே காரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், அதிர்ச்சித் தகவல்களையும் வெளியிட்டார்.

சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம் : டிலான் கடும் எச்சரிக்கை | Sri Lanka Risk Isolated International Dilan Warns

"ஈ-கடவுச்சீட்டு அச்சிடுவதற்காக விண்ணப்பித்திருந்த தகுதியான போலந்து நாட்டு நிறுவனம் உட்பட ஆறு சர்வதேச நிறுவனங்கள் எவ்வித நியாயமான காரணமுமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன.

தகுதியான நிறுவனங்களை ஓரம் கட்டிவிட்டு, அரசுக்கு நெருக்கமான ஒருவருக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க திரைமறைவு வேலைகள் நடக்கின்றன" என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த டெண்டர் நடைமுறையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து, போலந்து அரசு ஐரோப்பிய ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாகப் புகாரளிக்கத் தயாராகி வருகின்றது என்றும் டிலான் பெரேரா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் 

போலந்து போன்ற நட்பு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் முறையிட்டால், அது இலங்கையின் சர்வதேச நற்பெயரைக் கடுமையாகப் பாதிக்கும்.

இதனால் உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்று எச்சரித்தார்.

சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம் : டிலான் கடும் எச்சரிக்கை | Sri Lanka Risk Isolated International Dilan Warns

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் இழைக்கும் தவறுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பான விசாரணைகள் முடியும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பதவிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் நடுநிலையாக இல்லை என்றும், பிணைமுறி உள்ளிட்ட நிதி முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை அவர் திசைதிருப்ப முயற்சிக்கின்றது என்றும் டிலான் பெரேரா இதன்போது கடுமையாகச் சாடியுள்ளார்.

வெளிநாடு சென்றவருக்கு அதிர்ச்சி! இலங்கையிலுள்ள வீட்டில் நடந்த பயங்கரம்

வெளிநாடு சென்றவருக்கு அதிர்ச்சி! இலங்கையிலுள்ள வீட்டில் நடந்த பயங்கரம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US