ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலர் கடன் கோரியுள்ள இலங்கை! - கொழும்பு ஊடகம் தகவல்
கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், போர் தொடுப்பதற்கு முன்னரா அல்லது அதற்குப் பின்னரோ இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இலங்கை தற்போது பாரிய வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா வாக்கெடுப்பின் போது இலங்கை வாக்களிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் தலைமையிலான ரஷ்ய வர்த்தகக் குழு ஒன்று இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
