இலங்கையில் உச்சம் தொட்ட கோவிட் மரணங்கள்! ஒரே நாளில் 11 பேர் பலி
இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், தெஹியத்தகண்டிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், திவுலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும், பெபிலியாவல பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், அனுராதபுரம் 64 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 94 வயதுடைய ஆண் ஒருவரும், பரகஸ்தொட பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 1,636 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 108,146 பேருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 530 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,975 ஆக அதிகரித்துள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
