இலங்கையில் அரசியல் உரிமைகள்:சர்வதேசம் வெளியிட்டுள்ள அறிக்கை
இலங்கை 2025 ஆம் ஆண்டில் அரசியல் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளில் முன்னேற்றமடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளதாக பிரிடம் ஹவுஸ் (freedom house ) நிறுவனத்தின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய சுதந்திரம் தொடர்ந்து 20-வது ஆண்டாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இலங்கை இந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான மாற்றம் முன்னேற்றம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் மத சகிப்புத்தன்மையை மேம்படுத்த புதிய அரசாங்கம் எடுத்த முயற்சிகளைக் மேற்கோள் காட்டி இலங்கை ஐந்து புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பிரீடம் ஹவுஸ் தனது 2026 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
உலகில் 54 நாடுகள் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் 35 நாடுகள் மட்டுமே முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அவற்றுள் இலங்கை குறிப்பிடத்தக்க தன்மையைக் காட்டியுள்ளது.
சிரியா இலங்கை பொலிவியா மற்றும் காபோன் ஆகிய நாடுகள் அந்த ஆண்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்த நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மோதல்கள், சதிகள் ஜனநாயக நிறுவனங்களின் சிதைவு மற்றும் அதிகாரத்தின் ஆக்கிரமிப்பு காரணமாக உலகெங்கிலும் ஜனநாயக சுதந்திரம் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இலங்கை முன்னோக்கி சென்றுள்ளது.
இலங்கையின் முன்னேற்றத்திற்கு மத்தியிலும் கினி-பிசாவு, தான்சானியா, புர்க்கினா பாசோ, மடகஸ்கர் மற்றும் எல் சால்வடார் உள்ளிட்ட பல நாடுகளின் நிலைமை மோசமடைந்ததால் உலகளாவிய சுதந்திரம் தொடர்ந்து 20-வது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

பொலிவியா, பிஜி மற்றும் மலாவி ஆகிய மூன்று நாடுகள் பகுதியளவு சுதந்திரம் கொண்ட நிலையிலிருந்து சுதந்திரமான நிலைக்கு உயர்ந்துள்ளன.
இலங்கை தொடர்ந்தும் 'பகுதியளவு சுதந்திரம்' கொண்ட நாடாகவே நீடித்தாலும்இ அளவிடக்கூடிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் நிலவிய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற நிலைக்குப் பின்னர் இலங்கையின் இந்த முன்னேற்றமானது தொடர்ச்சியான ஜனநாயக மீட்சியைப் பிரதிபலிக்கிறது என பிரீடம் ஹவுஸ் தெரிவித்துள்ளது.
விருது மேல் விருது வாங்கிய பல்லவன், வீட்டில் நடேசன் செய்த காரியம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam