இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கோவிட் மரணங்கள் பதிவானது!
இலங்கையில் கோவிட் தொடர்பான 44 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1132 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் ஒரே நாளில் கோவிட் தொற்றினால் ஏற்பட்ட அதிகூடிய மரணங்கள் இதுவாகும்.
71 வயதுக்கு மேற்பட்டவர்கள் 23 பேரும், 61 - 70 வயதுக்கு உட்பட்ட 11 பேரும், 51 - 60 வயதுக்கு உட்பட்ட 7 பேரும், 31 - 40 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேரும், 21 - 30 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 30 ஆண்களும், 14 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3538 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 158,324 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.