அடிப்படை உரிமைகளை ரணில் விக்ரமசிங்க நிர்வாகம் மதிக்க வேண்டும் - சர்வதேச அமைப்பு வலியுறுத்தல்
அமைதியான போராட்டம் உட்பட அடிப்படை உரிமைகளை ரணில் விக்ரமசிங்க நிர்வாகம் மதிக்க வேண்டும் என சர்வதேச அமைப்பொன்று வலியுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் பொதுமக்கள் எதிர்ப்புக்களுடன் ஏற்பட்ட வியத்தகு எரிபொருள் பற்றாக்குறை தணிந்திருக்கலாம், எனினும் மில்லியன்கணக்கான இலங்கையர்களுக்கு பொருளாதார நெருக்கடி முன்னெப்போதையும் விட மோசமாகியுள்ளது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்றும், இந்த ஆண்டு வறுமை வீதம் இரட்டிப்பாகியுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

பற்றாக்குறை
உணவு விலை பணவீக்கம் அக்டோபரில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. மேலும் வெளிநாட்டு நாணயத்தின் கடுமையான பற்றாக்குறை, அத்தியாவசிய மருந்துகள் உட்பட பல இறக்குமதிகள் பற்றாக்குறையாகவோ அல்லது பெற முடியாததாகவோ உள்ளது.
இந்நிலையில் அமைதியான போராட்டத்தை அதிகாரிகள் ஒடுக்கினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆர்ப்பாட்டங்களை நசுக்கியுள்ளார் மற்றும் மாணவர் செயற்பாட்டாளர்களை தடுத்து வைப்பதற்கு இழிவான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளார்.
அத்துடன் விக்ரமசிங்க மீண்டும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதாகவும், பாரிய எதிர்ப்புக்கள் ஏற்பட்டால் பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்துவதாகவும் எச்சரித்துள்ளார்.

எனினும் அமைதியான போராட்டத்திற்கான உரிமை உட்பட மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல், தவறான நிர்வாகத்திற்கோ அல்லது ஊழலுக்கோ அரசியல்வாதிகளால் தீர்வை தரமுடியாது என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
எனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இலங்கையின் சர்வதேச நாடுகள், நெருக்கடியை எதிர்கொள்வதற்கான இன்றியமையாத படியாக மனித உரிமைகள் கடமைகளை
நிறைவேற்றுமாறு ரணிலின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது அவசியமாகும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri