உலகில் எந்த நாடும் கொடுக்காத விலையை கொடுத்த இலங்கை! பல மில்லியன் டொலர்களுக்கு என்ன ஆனது..
உலகில் வேறு எந்த நாடும் வாங்காத விலையில், எரிபொருள் கொள்வனவு செய்த ஒரே நாடாக இலங்கை மாறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, கொள்கைகள் மூலமாக நாட்டை ஆள்வதற்கு தயாராகியிருக்கின்றோம். இன்றைய அரசாங்கம் எல்லையற்ற பொய்களைச் சொல்லி ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர். இலங்கை வரலாற்றில் இவ்வளவு பொய்களைச் சொன்ன எந்த அரசாங்கமும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
நிதி மோசடி
அவர்கள் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றப் போவதுமில்லை. தற்போது நாட்டு மக்களின் மீது முடிவில்லாத வரிச்சுமை உள்ளது. அரசாங்கத்தில் நடக்கும் மோசடிகள் மற்றும் ஊழல்களால் ஏற்படும் இழப்புக்களை ஈடு செய்வதற்காக மக்கள்மீது அதிக வரிச்சுமையை அரசாங்கம் சுமத்துகின்றது.
மின்சாரக் கட்டணத்தை அதிகரித்திருக்கின்றார்கள். உலகத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இவ்வாறு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியாயின், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததும் போர்ச்சூழல் காரணமாகத் தானா என நாம் கேட்க விரும்புகின்றோம்.

உலகில் வேறு எந்தவொரு நாடும் வாங்காத விலையில் இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்துள்ளது. அதையும் இந்த அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. ஒரு தனியார் வங்கியின் தலைவர் அதைப் பற்றிக் கூறினார். முதலில் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். எனினும், அது உண்மையான ஒன்று என்பதால் அவர்களால் தொடர்ந்து மறுக்க முடியவில்லை.
திறைசேரியில் இருந்து பல மில்லியன் டொலர் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்த அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி எடுத்த நடவடிக்கை என்ன? இறுதியில், சாட்சியாளர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டது மாத்திரம் தான் இதில் நடந்த ஒரே விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை - 24 மணி நேரமும் எச்சரிக்கை நிலையில் அதிகாரிகள்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri