கொழும்பு பொரள்ளை போராட்டத்தில் பதற்றம்! பெருமளவான படையினர் குவிப்பு (Video)
புதிய இணைப்பு
ஜூலை 83 படுகொலையை நினைவு கூர கொழும்பு போரல்ல மயானத்தில் நினைவு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நினைவு நிகழ்வு நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு சிலர் திடீரென தலையிட்டு அதை குழப்ப முயன்றுள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேலான பொலிஸார் அங்கு குவிக்க வைக்கப்பட்டிருந்தும் இவர்கள் நினைவு நாளை குழப்புவதை தடுக்கவில்லை. இதன் பின் நடந்த வாக்குவாதத்தை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு போராடடத்தை நிறுத்த முயன்றதாக தெரிய வருகிறது.
இந்த போராட்டத்தை வடக்கு - கிழக்கு சொலிடாரிட்டி என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. ஐக்கிய சோஷலிச கடைசி போன்ற அமைப்புக்களை இதற்கு ஆதரவு வழங்கி இருக்கின்றன. அதன் செயலாளர் தள்ளி விழுத்தப்பட்டு காயமைடந்ததாகவும் தெரிய வருகிறது.
இரண்டாம் இணைப்பு
நினைவு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தவர்களும், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றுள்ளனர்.
இதேவேளை, சோசலிச இளைஞர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் வைத்து நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு பொரள்ளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவு நிகழ்வில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இவர்களை கலைக்கும் நோக்கில் பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது இராணுவத்தினர், கலகத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அமைதி போராட்டத்தை நடத்தியவர்களுக்கு எதிராக வேறு ஒரு குழுவினர் ஒன்றுதிரண்டு நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கலைக்கும் நோக்குடன் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.
இரு தரப்பினரையும் அவ்விடத்தில் இருந்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், நினைவு நிகழ்வினை ஏற்பாடு செய்த குழுவினர் அங்கு தொடர்ந்தும் விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.










கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
