வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் (Video)
அதிகரித்த வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக இன்றையதினம் (23.06.2023) காலை 09.30 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்கள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
வரி அறவீடு
மே மாதம் தொடக்கம் தங்களிடம் அதிகரித்த வரி அறவீடு மேற்கொள்வதற்கு எதிராக இவ் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 1500 ரூபா வரி மற்றும் கழிவகற்றலுக்காக 600 ரூபாவுமாக ஒவ்வொரு வியாபாரியிடமும் மாதாந்தம் பெறப்பட்டு வந்த நிலையில் மே மாதம் தொடக்கம் 7500 ரூபா வரியாகவும் 600 ரூபா கழிவகற்றலுக்கும் என 8100 ரூபா அறவிடுவதற்கு கரைச்சி பிரதேச சபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தே சந்தை வியாபாரிகள் தங்களது வர்த்தக நிலையங்ளை மூடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தீர்வு பெற்றுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டு குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam