மீண்டும் ஆயிரம் ரூபா வேதனம் கோரிய போராட்டம் (Photos)
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 1000 ரூபாயை உடனடியாக வழங்குமாறு கோரி இன்று (21.09.2022) தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு கோஸங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரவுன்ஸ்வீக் தேயிலைத் தோட்டங்களின் 07 பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் கட்சி பேதமின்றி இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இலங்கையில் 22 தோட்டக் கம்பனிகள் உள்ளதாகவும், அதில் மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி மாத்திரம் ரூ.1000 கொடுப்பதில்லை எனவும் தெரிவித்தனர்.
அத்தோடு, நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி தற்போது பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் தோட்டத் தொழிலாளர்களை மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.
01 கிலோகிராம் மாவின் தற்போதைய விலை ரூபா 400/- எனவும், மூன்று வேளை மாவு உணவை உண்ணும் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு 200/- முதல் 300/- வரை சம்பளம் பெற்று வாழ்வார்கள் எனவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தோட்ட உரிமையாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட 1000 ரூபாவை மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு மாத்திரம் வழங்க முடியாவிட்டால் வேறு நிறுவனத்திடம் வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் சுமார் 400ற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்
கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் பின்னர் தோட்டத் தொழிலாளர்கள் வழமை போன்று
தமது அன்றாட சேவைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.









தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam
