நாளை புதிய ஜனாதிபதி தெரிவு! இன்று கொழும்பில் ஆரம்பமானது போராட்டம்(Photos)
தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களும் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வர வேண்டாம்
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க கூடாது என தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜபக்சர்களை காப்பாற்றும் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம், ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என கோஷங்களை எழுப்பி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.