பணம் இல்லாத இலங்கையர்கள் இறக்க நேரிடலாம்! ரணில் அரசின் ஆயுட்காலம் தொடர்பிலும் அறிவிப்பு

Gotabaya Rajapaksa Maithripala Sirisena Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Food Crisis
By Benat Sep 29, 2022 10:12 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் ஆயுட்காலம் கடவுளுக்கே தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு நடத்தப்பட்ட  மக்கள் போராட்டத்தை விடவும் இனிவரப்போகும் மக்கள் போராட்டம் பலம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது நாடு அரிசியை ஏற்றுமதி செய்து வந்த நாடு ஆகும். வரலாற்றில் எமது நாடு பல்வேறு குழப்பமான சூழ்நிலைகள் நிலவிய காலத்திலும்கூட அரிசிக்கு தட்டுப்பாடு இருந்ததில்லை.

உணவில்லாத அவல நிலை

பணம் இல்லாத இலங்கையர்கள் இறக்க நேரிடலாம்! ரணில் அரசின் ஆயுட்காலம் தொடர்பிலும் அறிவிப்பு | Sri Lanka Protest Ranil Gotabaya Maithripala

விவசாயம் செய்து, முழு நாட்டுக்கும் உண்ண சோறு போட்ட விவசாயிக்கும், அவனது குடும்பத்திற்கும் கூட சோறு இல்லாத அவல நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான கொள்ளைகள் காரணமாக நாடு இன்று உணவுத் தட்டுப்பாடு, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பட்டினி வீதத்தை குறைப்பதற்கு நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அரச நிறுவனங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உணவு பற்றாக்குறையால், பாடசாலை மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். போஷாக்கான உணவு அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கு போஷாக்கான உணவை கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் நாளொன்று ஒருவேளை உணவை மாத்திரம் உட்கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையை மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியம். பணம் படைத்தவர்களுக்கு நாட்டில் பட்டினி வீதம் அதிகரிப்பது குறித்து பிரச்சினை இல்லை. ஆனாலும், சாதாரண மக்களுக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாகும். நாட்டில் உணவுத் தட்டுப்பாடு அதிகரித்தால், பணம் இல்லாதவர்கள் இறக்க நேரிடும்.

ரணில் அரசின் ஆயுட்காலம்

பணம் இல்லாத இலங்கையர்கள் இறக்க நேரிடலாம்! ரணில் அரசின் ஆயுட்காலம் தொடர்பிலும் அறிவிப்பு | Sri Lanka Protest Ranil Gotabaya Maithripala

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் கடவுளுக்கே தெரியும். குறுகிய எண்ணிக்கையிலான அமைச்சர்களே இடம்பெறுவர் ஆரம்பித்தில் கூறப்பட்டிருந்தாலும், நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை விடவும், இனிவரப்போகும் மக்கள் போராட்டம் பலம் வாய்ந்ததாக இருக்கும்.

பட்டினியால் வாடுவோரும், பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளும் என அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்பர். புதிய அரசாங்கம் உருவாக வேண்டும் என்பதை விடவும் ஊழலற்ற அரசாங்கம் அமைய வேண்டும். அதற்கு தேர்தல்களில் ஊழலற்றவர்களின் பெயர்களை கட்சி முன்மொழிய வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US