காலாவதியான கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துவதில்லை: சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
எதிர்பாளர்களை கலைக்கும் போது, காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்துவதில்லை என பொலிஸ் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளால் உரிய பயன் கிடைக்காது என்பதால் அவற்றை பயன்படுத்துவதில்லை.
பொதுவாக, திறந்த கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி கண்ணீர்ப்புகை குண்டு பெறப்படுகின்றது.
கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதல்
எதிர்ப்பாளர்களை கலைக்க, பொலிஸார் காலாவதியான கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தியதாக சில குற்றச்சாட்டுகள் உள்ளன.
எனினும் எந்தவொரு தயாரிப்பு காலாவதியானாலும், அது சிறந்த முடிவுகளைத் தராது.
காலாவதி திகதிக்கு பின்னர் எரிவாயு உரிய வகையில் இயங்காது எனவே அதனை பயன்படுத்துவதால் பயன் இல்லை.
மூவர் உயிரிழப்பு
கலகத் தடுப்பு குழுவின் அதிகாரிகளின் கூற்றுப்படி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கண்ணீர்ப்புகை குண்டுகளே போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த வாரத்தில் கண்ணீர்ப்புகை குண்டு தாக்குதல் காரணமாகவே எதிர்ப்பாளர்கள் மூன்று பேர் இறந்தனர் என்று தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
குறித்த மூவரினதும் மரணங்கள் தொடர்பான பிரேத
பரிசோதனை அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை என்பதால், எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 29 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
