இலங்கை சிறை தகர்பின் பின்னணியில் பிரான்சில் தீட்டப்பட்ட சதி! திடுக்கிடும் இரகசியம் அம்பலம்
அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் (நீர்கொழும்பு, மகர, மேகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை) இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கலவரங்கள் மற்றும் சிறை உடைப்பு முயற்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சிறைச்சாலைகளில் நடக்கும் இந்தக் கலவரங்கள் தற்செயலானவை அல்ல; இவை வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக பிரான்சில் மறைந்திருக்கும் குடு சலிது (Kudu Salidu) என்பவரால் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் உறவினருடன் இணைந்து திட்டமிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையிலிருந்து தப்பியோடிய இவர், பிரான்சில் இருந்தபடியே இக்கலவரங்களை இயக்கி வருவதாகவும், சிறைச்சாலைகளில் உள்ளவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை அவரது குடும்பத்தினருக்கு வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிற அரசியல் பிரமுகர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதே இந்தச் சூழ்ச்சிகளின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினர், அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் இந்தக் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இந்தச் சூழலைச் சீர்குலைவு முயற்சிகளாகக் குறிப்பிடுகிறார்.
இந்தச் சூழலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...