இலங்கையில் ஒரே நாளில் பெருந்தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்
இலங்கையில் ஒரே நாளில் பெருந்தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை வரலாறு காணாத அளவிற்கு பெருந்தொகை பணத்தை ஒரே நாளில் அச்சிட்டுள்ளது என ஆங்கில நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகையை ஈடு செய்யும் நோக்கில் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரி வருமானம் குறைந்தமை, கொவிட் தொற்று காரணமாக முடக்க நிலைமைகள், செலவு அதிகரிப்பு போன்ற காரணிகளினால் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 208.45 பில்லியன் ரூபா பணம் அச்சிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னர் கடந்த வாரம் 23 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி மொத்த திறைசேரி பத்திரங்களின் பெறுமதி ஒரு ட்ரில்லியன் ரூபாவிற்கு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 25ஆம் திகதி அரசாங்கத்தினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட மொத்த பணத்தின் பெறுமதி 919.22 பில்லியன் ரூபாவாக காணப்பட்டதுடன் புதிதாக பணம் அச்சிடப்பட்ட காரணத்தினால் இந்த பெறுமதி 1127.65 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.