பயங்கரவாத்திற்கு எதிரான புதிய சட்ட மூலம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிற்கும் நிகழ்வு (photo)
தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதச் சட்டத்திற்கு மாற்றீடாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத்திற்கு எதிரான புதிய சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடையங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிற்கும் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது மட்டக்களப்பிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று (18.04.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத சட்டத்தை விடவும், புதிதாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்திலுள்ள விடையங்கள், அது அவ்வாறு மக்களின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் இச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமலிருப்பதற்கு பொதுமக்களும், பொது அமைப்புக்களும், எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பயங்கரவாத்திற்கு எதிரான புதிய சட்டம்
இந்நிலையில் பயங்கரவாத்திற்கு எதிரான புதிய சட்ட மூலத்தில் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதோடு, அடுத்துவரும், நாட்களில் கிழக்கு மாகாணம் பூராகவும், இதனை மக்களுக்கு விளக்குவது எனவும், ஏனைய துறைசார்ந்தோருக்கும் விளக்கமளித்து.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், சமூக
செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின்
பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டர்
அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






