பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம்! வெளிவரும் கண்டனங்கள்

Sri Lankan Tamils Sri Lanka Government Sri Lanka Prevention of Terrorism Act NPP Government
By Rusath Feb 26, 2026 05:21 AM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இன்று பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்போம் எனும் சட்ட மூலத்தினை நடைமுறைப்படுத்த தயாராகிறது என்று சட்டத்தரணி அ.நிதான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 புதன்கிழமை (25.02.2025) கல்முனையில் வைத்து ஊடகங்களுக்கு விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தற்காலிக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக கூறி ஆட்சியாளர்களாக வந்த தேசிய மக்கள் சக்தி கட்சி தற்பொழுது பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பது எனும் நோக்கத்திலே PSTA என்கின்ற ஒரு புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது.

இந்த குறித்த சட்டமூலம் தொடர்பிலான விடயத்தை அரசு முன்வைத்திருக்கின்ற போதிலும் இது பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடான ஒரு தற்காலிக சட்டத்தை மிகவும் பலமாக ஒரு நிரந்தர சட்டமாக்கும் முகமாக தற்பொழுது நிலை மாறிக் கொண்டிருக்கின்றது.

அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருக்கின்ற கடுமையான விடயங்களை தற்காலிக சட்டத்தில் இருந்து நீக்குவதாக கூறிய அரசு தற்போது அதனை முழுமையாக நிறைவேற்றும் வகையிலே அதுக்கு மாற்றீடாக மிகவும் பலமான கொண்டு வந்து தற்காலிக சட்டத்தை இல்லாமல் ஆக்காது அதனை ஒரு பலமான ஒரு சட்டமாக நடைமுறைப்படுத்தக் கூடிய வகையிலே தற்பொழுது நடவடிக்கைகளை மேற்கொள்வது, குறிப்பாக சர்வதேச சமூகங்களுக்கு மிகக் கொடிய விடயங்களில் நாங்கள் இல்லாது ஒழிக்க போகின்றோம்.என நாடகம் காட்டும் செயற்பாட்டினை முன்னெடுக்கின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம்! வெளிவரும் கண்டனங்கள் | Sri Lanka Prevention Of Terrorism Act

தற்காலிக சட்டமாக இருக்கும் PTA ஆனால் அது மக்களை மிகவும் துன்புறுத்துகின்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும்கூட இப்பொழுது அவ்வாறான ஒரு கருத்தினை மாற்றாக கொண்டு பெயரினை மட்டும் மாற்றி விடயத்தை அதன் உட்கருவில் மிகவும் பலமாக வலியுறுத்தக்கூடிய வகையிலே தான் இந்த புதிய சட்டமூலம் வருகின்றது.

பெயர் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றது உள்ளீடுகள் மிகவும் வெகுவான ஒரு பலமான அடிப்படை உரிமைகளை பாதிக்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது. இவ்வாறான காரணங்களினால் மக்கள் தொடர்ந்து குறிப்பாக சிறுபான்மை மக்களே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதிகமாக நூற்றுக்கு 90 வீதமான சிறுபான்மை மக்களே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களாக இலங்கையில் இருக்கின்றார்கள்.

அதை விட இந்த சட்டம் சிறுபான்மை இனத்தாருக்கு மட்டுமல்ல இனி எதிர்காலத்தில் பெரும்பான்மை மக்களுக்கு அரசுகெதிராக ஒரு ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கின்ற போதுகூட அரசு PSTA சட்டத்தினை பயன்படுத்தி கைது செய்ய முடியும். அந்த தடைச் சட்டத்தை இப்போது வந்திருக்கின்ற புதிய வடிவம் அரசுக்கு எதிரான பயங்கரவாதத்தை தடுப்போம் என்கின்ற அந்த சட்டமூலத்தின் ஊடாக அதனை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பதனை நாங்கள் இந்த சட்ட வரைபினூடாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

ஆகவே இது ஒரு முழுமையாக சர்வதேசத்திற்கு வழங்கப்படுகின்ற ஒரு கண்துடைப்பு நாடகமாகவும், மேலும் மக்களினை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் வகைகளில் அமைக்கப்படும் ஒரு சட்டமாகவே இருக்கின்றது. 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு இன்று 30 வருடங்களுக்கு மேலாகக் செல்லப்படுகின்றது மக்கள் அதனால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற போது, இப்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படுகின்ற புதிய சட்டம் மக்களை துன்புறுத்தக்கூடிய சட்டமாகத்தான் இப்போது வருகின்றது.

ஊடக சுதந்திரத்தை முடக்குவதாகவும், தனிமனித சுதந்திரத்தை முடக்குவதாகவும், ஜனநாயகத்தின் ஒரு தூணாக கருதப்படுகின்ற இந்த ஊடக சுதந்திரமானது தொடர்ந்து நசுக்கப்படுவதற்கும் வசதி வாய்ப்பாக இந்த புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் உடைய புதிய வடிவம் அமைந்திருக்கின்றது. எதிர்காலத்தில் ஊடகங்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்வதில் கூட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய இருக்கின்றது.

ஆகவே ஊடகவியலாளர்களும் அவர்களுடைய செய்திகளை மக்களுக்கும் உலகறிய செய்வதற்குமான ஒரு சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியலமைப்பில் சொல்லப்பட்டிருக்கின்ற ஜனநாயகத்தினுடைய ஒரு முக்கியமான தூணாக கருதப்படுகின்ற ஊடகச் சுதந்திரம் கருத்து சுதந்திரம் பொதுவாக பாதிக்கப்படும். அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டிருக்கின்ற எங்களுடைய கருத்து சுதந்திரங்கள் அதற்குரிய உறுப்புரைகளும் பொதுவாக பாதிக்கப்படும். என சட்டத்தரணி அ. நிதான்சன் தெரிவித்தார். 

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US