உண்பதற்கு மாத்திரமே வாய் திறக்கும் சில சமூக செயற்பாட்டாளர்கள்: ஜே.வி.பி. சாடல்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதை அரசு பிற்போட்டாலும் அந்த சட்டமூலத்தை எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வலியுறுத்தியுள்ளனர்.
இன்றைய தினம் (04.05.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசிடம் இதைச் செய்யுங்கள் என்று அழுத்தம் கொடுக்க முடியாது, செய்ய வேண்டாம் என்று கூறவும் முடியாது. அப்படியொரு சட்டமூலம் இது.
எவரும் இருக்கக்கூடாது
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு மக்களின் எதிர்ப்பு வந்தால் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் எங்களிடம் இருக்கின்றது என்று நாணய நிதியத்திடம் காட்டுவதற்காகவே அரசு இந்தச் சட்ட மூலத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றது.
இதை எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். தனக்கு ஆபத்து வரும் வரை எவரும் இருக்கக்கூடாது. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அது எல்லோருக்கும்தான்.
அதனால் எல்லோரும் ஒன்றிணைந்து இதை எதிர்க்க வேண்டும்.
சில சமூகச் செயற்பாட்டாளர்கள் சாப்பிடுவதற்கு மாத்திரமே வாய்
திறக்கின்றார்கள். அவர்களுக்கென்று பிரச்சினை வரும்போதுதான் சத்தம்
போடுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
