புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்; மக்களை ஒடுக்குவது பற்றிச் சிந்தித்தே தயாரிக்கப்பட்டது: சமத்துவக் கட்சி!

Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Suliyan Apr 16, 2023 11:11 AM GMT
Report

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை ஒடுக்குவது பற்றிச் சிந்தித்தே தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்காலத்தில் இது கொண்டுவந்தோரையும் ஆதரித்தோரையும் திருப்பித்தாக்கும் எனவும் சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமார் நேற்றைய தினம் (15.04.2023) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நாட்டை மேலும் நெருக்கடிக்குள்ளாகும் அபாயகரமான சட்டமாகவே உள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்; மக்களை ஒடுக்குவது பற்றிச் சிந்தித்தே தயாரிக்கப்பட்டது: சமத்துவக் கட்சி! | Sri Lanka Prevention Of Terrorism Act

மிக விரைவில் காண வேண்டும்

இது நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை நிச்சயமாக உண்டாக்கும். மேலும், மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதுடன், நீதித்துறையையும் பலவீனப்படுத்தும். அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்றவற்றிலிருந்து மீள வேண்டிய நிலையில் உள்ள நாட்டை எதிர்நிலைக்குள்ளாக்கி, ஜனநாயக நெருக்கடிக்குள்ளும் தள்ளிவிடும். இந்தத் தவறினை அரசாங்கம் செய்யக் கூடாது.

நாட்டிலே தீர்வின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்ற இனப்பகை, அதன் விளைவான அரசியல் நெருக்கடி. நாட்டை ஸ்தம்பித்த நிலைக்குள்ளாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றிற்குத் தீர்வைக் கண்டு, நாட்டை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. இதற்கான வழிவகைகளை மிக விரைவில் காண வேண்டும்.

இதில் அனைத்துத் தரப்பினருடைய பங்கேற்பும் அவசியமாகும். 00 அதற்கான ஏது நிலைகளையும் சூழலையும் அரசாங்கம் உருவாக்கி இந்தப் பங்களிப்பைப் பெற வேண்டும். இதைச் செய்வதற்குப் பதிலாக, புதிய புதிய சட்டங்களால் மக்களையும் மக்களுக்கான செயற்பாட்டியக்கங்களையும் கட்டுப்படுத்தி அரசாங்கத்திலிருந்து தூர விலக்க முற்படுவது அபாயகரமானது. மட்டுமல்ல, அது மக்களுடைய உரிமைகளை இல்லாதொழிப்பதுமாகும். இது நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்; மக்களை ஒடுக்குவது பற்றிச் சிந்தித்தே தயாரிக்கப்பட்டது: சமத்துவக் கட்சி! | Sri Lanka Prevention Of Terrorism Act

அரசுக்கும் ஆட்சிக்குமாக இருக்க முடியாது

1979இல் தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்டு இன்னும் நிலுவையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் நாடு சந்தித்த பேரிழப்புகளும் பின்னடைவுகளும் கொஞ்சமல்ல. அப்படியிருக்கும்போது அதையும் விட மிக மோசமான புதிய தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தால் இரட்டிப்புப் பாதிப்பும் பின்னடைவுமே நிகழும். உலகிலுள்ள சில நாடுகளில் ஜனநாயகச் செழிப்பைப் புறக்கணித்து அரைச் சர்வாதிகார ஆட்சிமுறை முன்னெடுக்கப்படுகிறது என்பதற்காக அதைப்போல இலங்கையும் தன்னை உருவகிக்க முற்படுகிறது. இது தவறானதாகும். 

வளர்ச்சிப் போக்கானது அரசின் அதிகாரத்தையும் ஆட்சி உரிமையையும் மக்கள் மயப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் ஒரு நாட்டின் வளர்ச்சியானது அதனுடைய ஜனநாயகச் செழிப்பினால்தான் வளம்பெறுகிறது என மதிப்பிடப்படுகிறது.

அரசும், ஆட்சியும் மக்களுக்கானதே அன்றி, மக்கள் ஒரு போதும் அரசுக்கும் ஆட்சிக்குமாக இருக்க முடியாது. இப்பொழுது உருவாக்கப்படும் புதிய பயங்கரவாதச் சட்டமானது, தலைகீழான முறையில் அரசையும் ஆட்சித் தரப்பையும் பாதுகாக்க முற்படுகின்றதாகவே அமைந்துள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்; மக்களை ஒடுக்குவது பற்றிச் சிந்தித்தே தயாரிக்கப்பட்டது: சமத்துவக் கட்சி! | Sri Lanka Prevention Of Terrorism Act

பலி கொடுக்க முடியாது

இதன் மூலம் மக்களின் வாழும் உரிமைகள் கட்டுப்படுத்துப்படுவதுடன், கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது வரை பகிரங்கமான ஒடுக்குமுறையை சட்டபூர்வமாக மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது நாட்டின் வளர்ச்சியை மறுதலித்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பையே உண்டாக்கும். இத்தகைய யதார்த்த நிலையை உணராத அதிகாரத்துவச் சிந்தனைப் போக்குக்கு மக்களையும் நாட்டையுமே பலி கொடுக்க வைக்கும்.

வரலாற்றிலிருந்தும் உலக அனுபவங்களிலும் பாடங்களைப் படித்துக் கொள்ளாத – கணக்கெடுக்காத பொறுப்பற்ற சட்ட விளையாட்டிற்கு மக்களையும் நாட்டையும் பலி கொடுக்க முடியாது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்; மக்களை ஒடுக்குவது பற்றிச் சிந்தித்தே தயாரிக்கப்பட்டது: சமத்துவக் கட்சி! | Sri Lanka Prevention Of Terrorism Act

பாதுகாப்பிலும் கரிசனை

மேலோட்டமாகப் பார்க்கும்போது இத்தகைய சட்டமானது நாட்டிற்கு அவசியமானதைப்போல அதிகாரத்திலிருப்போருக்குத் தோன்றலாம். அரசாங்கம் மேற்கொள்ள முற்படுகின்ற நடவடிக்கைகளுக்கான ஏதுநிலைகளை எட்டுவதற்கு ஒரு முகப்பட்ட சூழலை இது உருவாக்கும் எனத் தெரியும். அப்படியாயின் அது சர்வாதிகாரப் போக்கின் அடையாளமாகவே இருக்கும்.

இந்த ஆட்சி மாறிப் புதிய ஆட்சி ஒன்று அமையுமிடத்து, இந்தச் சட்டத்தின் பாரதூரத்தன்மையை இதைக் கொண்டு வந்தோரும் முன்மொழிந்தோரும் கூட அனுபவிக்க நேரலாம்.

ஆகவே நாட்டின் மேம்பாட்டுக்குரிய வழிவகைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர, எந்த நிலையிலும் அதற்கு எதிராக மக்களைக் கட்டுப்படுத்தி ஒடுக்குவதைப் பற்றிச் சிந்திக்கவே கூடாது. அது மோசமானது. எனவே இந்தப் புதிய பயங்கரவாதச் சட்டத்தினை நாட்டின் மேம்பாட்டிலும் பாதுகாப்பிலும் கரிசனை கொண்ட அனைவரும் மறுதலித்து எதிர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US