புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பொதுமக்களுக்கு பாரிய ஆபத்து: பிரபா கணேசன் (Video)
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு பாரிய ஆபத்து இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து இன்றைய தினம் (10.04.2023) எமது ஊடகத்திற்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குத் தயாராக இருக்கின்றது. இந்த சட்டத்தைப்பற்றி பொதுமக்கள் பலவிதமான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றார்கள்.
உண்மையில் இந்த தடைச்சட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு பாரிய அளவு ஆபத்து இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
1979ஆம் ஆண்டு தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், இன்று அதி பயங்கரமான தோற்றத்திலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam