பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம்! வெளியான வர்த்தமானி
பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த புதிய சட்ட மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரானது
பயங்கரவாதத்திற்கு எதிரானது எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம், ஆங்கிலத்தில் எண்டி – டெரரிசம் (anti-terrorism) எனக் குறிப்பிட்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்த சட்டமூலத்தை தயாரிப்பதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
