வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரின் கைதுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவரும் முடிச்சுப் போட வேண்டாம்: ரணில் திட்டவட்டம்

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Anti-Govt Protest Sri Lanka Prevention of Terrorism Act
By Rakesh Aug 23, 2022 07:02 AM GMT
Report

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தப்படுத்தியமையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார்.

"போராட்டங்களின் போது பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றனவா என்பது தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியே விசாரணைகளை மேற்கொள்ள முடியும்" என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

வசந்த முதலிகேயின் கைதுடன் அரசாங்கத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகேவைத் தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையெழுத்திடக் கூடாது என்று மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பிலான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது, 

வசந்த முதலிகே மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரின் கைதுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவரும் முடிச்சுப் போட வேண்டாம்: ரணில் திட்டவட்டம் | Sri Lanka Prevention Of Terrorism Act

"அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்படவில்லை.

அவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் உள்ளன. அவரைக் கைதுசெய்யும் உத்தரவை நீதிமன்றத்திடம் ஏற்கனவே பொலிஸார் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், சில தினங்ளுக்கு முன்னர் கொழும்பில் முறையற்ற விதத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

நீதித்துறையே இறுதி முடிவு எடுக்கும்

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரின் கைதுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவரும் முடிச்சுப் போட வேண்டாம்: ரணில் திட்டவட்டம் | Sri Lanka Prevention Of Terrorism Act

நாட்டில் அண்மையில் மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு இடையில் தோற்றம் பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளுடன் அவர்களுக்குத் தொடர்பு உண்டா என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரின் கைதுக்கும் அரசுக்கும் இடையில் எவரும் முடிச்சுப் போட வேண்டாம். அவர்கள் மூவரினதும் விவகாரம் தொடர்பில் நீதித்துறையே இறுதி முடிவு எடுக்கும்.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்யும்போது பயங்கரவாதத் தடைச் சட்டமும் பயன்படுத்தப்படும். இது புதிய விடயம் அல்ல" என்றார்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US