நாமலினால் ராஜபக்ச குடும்பத்திற்குள் குழப்பம்: எதிர்வரும் நாட்களில் அம்பலமாகும் உண்மை
ராஜபக்ச குடும்பத்திற்குள் குழப்பம் என்று முன்னெடுக்கப்படும் பிரசாரம் பொய் என்பது எதிர்வரும் நாட்களில் அம்பலமாகும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி வேட்பாளராக நாமல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச குடும்பத்திற்குள் குழப்பமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக பொய்யான பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பிரசாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் ராஜபக்சர்களின் ஒற்றுமை நிரூபணமாகும்.
ஜனாதிபதி வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டமைக்கு கட்சியின் தீர்மானம் தான் காரணமாகும். கட்சி தேசத்தின் எதிர்காலத்தினை மையப்படுத்தியே தீர்மாத்தை எடுத்தது.
அந்த வகையில் தேசத்தின் எதிர்காலம் சம்பந்தமாக எனக்கும் பொறுப்புள்ளது. அந்த பொறுப்பின் அடிப்படையில் தான் நான் பொறுப்பேற்றுள்ளேன்.
இத்தருணத்தில் எமது குடும்பத்துக்குள் பிரச்சினைகள் என்று பிரசாரம் செய்கின்றார்கள். அவற்றை நிராகரிக்கின்றேன். அதுமட்டுமன்றி அரசியல் ரீதியாக பலவீனம் அடைந்துள்ளவர்களின் செயற்பாடாகவே இதனை பார்க்கின்றேன்.
எதிர்வரும் நாட்களில் தேர்தல் பிரசாரப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. அதன்போது ராஜபக்சர்களின் ஒற்றுமை மேடைகளின் ஊடாக வெளிப்படுத்தப்படும். எதிர்க்கட்சியினரின் பொய்யான பிரசாரம் அப்போது அம்பலமாகும் என குறிப்பிடடுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 14 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri
