ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் மாயம்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் மாயமாகி உள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 15 பேர் மட்டுமே தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக, நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், சில ஜனாதிபதி வேட்பாளர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள்
இதேவேளை, மேற்குறித்த 23 பேரில் ஐவருக்கு குறைந்தது சமூக ஊடகங்களான பேஸ்புக் கணக்குகூட இல்லை.
சிலர் தேர்தலில் போட்டியிடுவதாக பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 38 பேரின் புகைப்படங்களை தமது இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு முயன்றபோது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 15 பேரைத் தவிர ஏனைய 23 பேரிடம் அவற்றை பெற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 பேர் வேட்புமனு தாக்கதல் செய்த போதும், வேட்பாளரான ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் திடீரென உயிரிழந்த நிலையில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
