ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு
ஜனாதிபதி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து செலவு அறிக்கைகளும் எதிர்வரும் 24ஆம் திகதி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்
இந்த செலவு அறிக்கைகள் ராஜகிரிய தேர்தல் செயலகம் மற்றும் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல் ஆணையர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்த அறிக்கைகளில் யாருக்கேனும் சிக்கல் இருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட வேட்பாளர்களின் செலவு அறிக்கை கடந்த 13ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
