வடக்கில் சாதிய ஒடுக்குமுறை தொடர்பில் நாமல் குற்றச்சாட்டு
வடக்கில் சாதி ஒடுக்குமுறைமை காரணமாக இந்துக்களை உள்ளே அனுமதிக்காத சில கோயில்கள் இருக்கின்றன. அது அரசாங்க முறைமையினால் ஏற்பட்ட பிரச்சினையல்ல, மாறாக அது வடக்கின் கலாசார ரீதியிலான பிரச்சினையாகும் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மத சுதந்திரம் கொண்ட நாடு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உலகளாவிய ரீதியில் உயர் வருமானம் பெறும் சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர் மத சுதந்திரத்தைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது.

பௌத்தர்களும் இந்துக்களும் பல நூற்றாண்டு காலமாக அமைதியாக ஒருமித்து வாழ்ந்து வருகின்றனர். பௌத்த விகாரைகளை பாருங்கள் அவற்றுக்குள் இந்து வழிபாட்டு பகுதிகள் உள்ளன.
தெற்கில் உள்ள இந்து கோயில்களில் அவர்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கான சுதந்திரம் உள்ளன.
மோதல்கள் தொடர்பில் ஆங்காங்கே சில சம்பவங்கள் எப்போதும் இருக்கும் சட்டங்கள் மற்றும் தண்டனைகளின் ஊடாக மாத்திரம் எம்மால் ஒரு முழு நிறைவான சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது.

மத தலைவர்களுக்கு அவர்களை பின்பற்றுவோர் மத்தியில் நம்பிக்கைகள் சார்ந்த பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சகிப்புத் தன்மையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புண்டு. வடக்கை பாருங்கள். அங்கே சாதி ஒடுக்குமுறைமை காரணமாக இந்துக்களை உள்ளே அனுமதிக்காத சில கோயில்கள் இருக்கின்றன.
அது அரசாங்க முறைமையினால் ஏற்பட்ட பிரச்சினையல்ல மாறாக அது வடக்கின் கலாசார ரீதியிலான பிரச்சினையாகும். அதனை இந்து மத தலைவர்களே தீர்க்க வேண்டும். அதில் அரசாங்கம் தலையிட்டால் அவர்கள் தமது மத சுதந்திரம் பறிக்கப்படுவதாக கூறுவார்கள்.
நாம் அரசாங்கம் என்ற ரீதியில் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு அனைத்து பிரஜைகளுக்குமான மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தி பாதுகாப்போம். இது குறித்த தனித்த பிரிவு எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri