பொதுஜன பெரமுனவின் வாக்குகள் ரணிலுக்கு! மேடையில் உறுதியளித்த எம்.பி
69 இலட்சம் பெற்ற பொதுஜன பெரமுனவின் வாக்குகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குத் தான் கிடைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ரணிலை ஆதரித்து நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
[YQXSNXJ ]
ரணிலின் முயற்சி..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வங்குரோத்தடைந்த நாட்டை மீட்டதாலே கட்சிக் கொள்கைகளையும் கட்சியையும் ஓரங்கட்டி உங்களுடன் கைகோர்த்தோம்.
நிறைவேற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்று 24 மணிநேரத்தில் வன்முறைகளை நிறுத்தி நாட்டை சுமூக நிலைக்கு கொண்டுவந்தார்.
வெளிநாட்டு தலைவர்களுடன் நாட்டை மீட்க நீங்கள் எடுத்த முயற்சிகளை நான் நேரில் கண்டிருக்கிறேன். உங்களை ஏற்று உலக நாடுகள் உங்களுக்கு உதவின.
ரணில் விக்ரமசிங்க என்ற பாத்திரத்தை மதிப்பதாலே அவர்கள் உதவினர். உங்கள் மீதான நம்பிக்கையில் தான் கடனை மீளச் செலுத்த கால அவகாசம் வழங்கின.
69 இலட்சம் பெற்ற பொதுஜன பெரமுனவின் வாக்குகள் உங்களுக்குத்தான் கிடைக்கும். தலதா மாளிகையை அழிக்க குண்டு வீசிய ஜே.வி.பிக்கு கண்டி மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 23 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
