சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! இலங்கையர்கள் முன்னிலையில் 2 தெரிவுகள்
நாட்டு மக்களிடத்தில் இப்போது இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன. ஒரு புறத்தில் நாட்டையும் மக்களையும் மீட்ட தலைவர் இருக்கிறார். மறுபுறத்தில் நெருக்கடியின் போது ஓடி மறைந்த தலைவர்கள் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார்.
மகியங்கனை பொது விளையாட்டரங்கில் நேற்று (04) இடம்பெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதிபலன்கள் மக்களுக்கே..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
செப்டம்பர் 21 வாக்குசீட்டில் சரியான இடத்திற்கு வாக்களிக்க தவறினால் மக்கள் அதன் பிரதிபலன்களை அனுபவிக்க நேரிடும்.
இன்று வேறு நிற ஆடைகளை அணிந்துகொண்டிருந்தாலும், திசைக்காட்டி என்று பெயர் மாற்றிக்கொண்டாலும் அவர்கள் முந்தைய ஜே.வீ.பீ.காரர்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
அதேபோல் பழைய தொலைபேசியிலும் பயனில்லை. இந்த தேர்தலில் மக்களுக்கு இலகுவான இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன.
நாட்டை மீட்ட தலைவர்...
ஒரு புறத்தில் நாட்டையும் மக்களையும் மீட்ட தலைவர் இருக்கிறார். மறுபுறத்தில் நெருக்கடியின் போது ஓடிய தலைவர்கள் உள்ளனர். யாருக்கு உங்கள் வாக்கு என்பதை தீர்மானிக்க வேண்டும்.
நாடு அனுரவிற்கு என்கிறார்கள். அனுரவிற்கு நாடு சென்றால், நாடு இருளை நோக்கி செல்லும் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.
தற்போது அனுரவிற்கு ஒரு பயம் ஏற்பட்டுள்ளது. தவறியேனும் ஜனாதிபதி பதவி கிடைத்துவிட்டால் தான் என்ன செய்வது என்ற பதட்டம் அவருக்கு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |