6 மாதங்கள் மட்டுமே அனுரவால் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும்: ஹிருணிக்காவின் எதிர்வுகூறல்
ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிப்பெற்றால் ஆறு மாதங்கள் மாத்திரமே ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் கூறியதே உண்மையானது...
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க எப்படியாவது நாட்டின் ஜனாதிபதியானால் அதிகபட்சமாக ஆறுமாதங்கள் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும்.
கோட்டாபய ராஜபக்ச அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என நான் அப்போதே கூறியிருந்தேன். அதுவே உண்மையானது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சஜித் பிரேமதாச எந்த தவறும் செய்யாத மிக சுத்தமான அரசியல்வாதி என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
