நாமலுக்கு படுதோல்வி! பேராசை கொண்ட பசிலும் விலகிய தம்மிக்கவும்..
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச படுதோல்வியை சந்திக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக கினிகத்தேனை பகுதியில் இன்று (22) நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவிடம் கோரிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பூரண ஆதரவை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இதற்கு அவர் அன்று பதிலளித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா பெருமளவு பணத்துடன் தேர்தலுக்கு தயாரானார். பசில் ராஜபக்ச அந்த பணத்திற்கு பேராசை கொண்டிருந்தார்.
நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரியானவர் அல்ல என நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். அத்தோடு, பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்ததை அடுத்தே தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.