ஜனாதிபதி தேர்தல் கட்சித் தாவல் தொடர்பில் இரகசிய கலந்துரையாடல்!
வெகுவிரைவில் சஜித் அணியிலிருந்து 16 பேர் ரணிலுடன் இணைய போவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் காலப்பகுதியில் பல கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக முன்னதாகவே அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியிருந்தனர்.
இரகசிய கலந்துரையாடல்
இவ்வாறான சூழலில் தேசிய மக்கள் சக்தியின் முதன்மையான அரசியல் பிரமுகர்கள் இந்த கட்சி தாவலை மேற்கொள்வார்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த தகவல்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் மிகவும் ரகசியமாக ரணிலின் நம்பிக்கைக்குரிய ஒருவரின் தலைமையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தாவல்கள், புதிய வேட்பாளர்கள் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் என ஜனாதிபதி தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுவரையான அறிவிப்புகளின் படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ச, திலித் ஜயவீர, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தொழிலதிபர் ஜனக ரத்நாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரன் இஷான் ஜயவர்தன ஆகியோர் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.
மேலும் எதிர்வரும் அக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கான பிரச்சாரத்தை ஜூன் மாதம் ரணில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan