இலங்கையில் கொத்து ரொட்டி, பீட்சா கேட்கும் கர்ப்பிணிப் பெண்கள்! வெளிப்படுத்தப்படும் தகவல்
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் "இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போசாக்கு தொடர்பான வாதம்
மேலும் கூறுகையில், போசாக்கு தொடர்பான விவாதம் இரண்டு நாட்களாக நாடளுமன்றில் நடைபெற்று வருகிறது. உண்மையில் இது முக்கியமானது.
நாடு தற்போது உள்ள நிலையில் அடிப்படை விடயத்தை கூட இப்போது நாம் தலைப்பாக கதைக்க வேண்டி உள்ளது.
ஆரோக்கியமான உணவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
அக்கால கர்ப்பிணி பெண்கள் பலாக்காய், கீரை போன்று உணவுகளை விரும்பி உண்டார்கள்.
இதனால் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்தது.
இப்போது உள்ளவர்கள் கொத்து ரொட்டி, கோலா, பீட்சா கேட்க்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.