இலங்கையில் நீண்ட மின்வெட்டை தவிர்க்க முடியாது என எச்சரிக்கை
இலங்கையில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை நீண்டகாலத்திற்கு கொள்வனவு செய்வதற்கு புதிய விலைமனுவை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், அடுத்த மாதம் முதல் நீண்ட மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நீண்ட கால கடன் அடிப்படையில் நிலக்கரியை வழங்கக்கூடிய பொருத்தமான வழங்குனர்களுக்கான புதிய சர்வதேச திறந்த போட்டி மனுகோரலை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலக்கரி இருப்பு
தற்போதைய நிலக்கரி தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் கடந்த வருடம் வழங்கப்பட்ட மனுகோரலுக்கமைய பெறப்பட்ட 19 கப்பல்களின் நிலக்கரி இருப்புக்களை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆனால் கப்பல் ஒன்று நாட்டிற்கு வருவதற்கு 20 நாட்களுக்கு மேல் ஆகும் என மின்சார சபை கூறுகிறது. அதுவரை தற்போதுள்ள நிலக்கரி போதுமானதாக இருக்காது என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அடுத்த மாதம் முதல் 8 மணி முதல் 10 மணித்தியாலங்கள் வரை தினசரி மின்வெட்டு நீடிக்கப்படும் என சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய கப்பல்கள்
பொதுவாக, நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல் ரஷ்யாவில் இருந்து நாட்டை அடைய 20 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் இதுவரை நிலக்கரி வழங்க எந்த வழங்குனர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.
60,000 மெட்ரிக் தொன் கொண்ட 40 கப்பல்கள் ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் நாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்குப் பிறகு கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதே அதற்கு காரணமாகும்.
அதற்கமைய, 5 நாட்களுக்கு ஒருமுறை ஒரு கப்பல் நாட்டிற்கு வர வேண்டும். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு கடல் கொந்தளிப்புக்கு முன்னதாக நிலக்கரி ஏற்றிச் செல்லும் 40 கப்பல்களை நாட்டிற்கு கொண்டு வர முடியாது என மின்சார சபையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
