பரீட்சை காலத்தில் 24 மணிநேரமும் மின்சாரம்! வெளியான அறிவிப்பு
உயர்தர பரீட்சை முடிவடையும் வரை தடையின்றி மின்சாரத்தை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாமல் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று மின்சார அமைச்சு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபைக்கு அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், விசாரணையின் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
