மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 33 நிலக்கரி கப்பல்களில் 10 கப்பல்கள் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்திற்கு திட்டமிடப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி, அதனை கொள்வனவு செய்ய தேவையான பணம் மற்றும் மின்வெட்டு இன்றி மின்சாரம் வழங்குவது தொடர்பான கொள்கை மீளாய்வு நேற்று (24.01.2023) இடம்பெற்றிருந்தது.
இதன்போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
நிலக்கரி கப்பல்களை கொண்டுவர திட்டம்
அத்துடன் பெப்ரவரி மாதத்தில் மேலும் 7 நிலக்கரி கப்பல்களையும், மார்ச் மாதத்தில் 7 கப்பல்களையும், ஏப்ரல் மாதத்தில் 7 கப்பல்களையும் கொண்டு வருவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு அரச வங்கிகளிடமும் கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வங்கிகளில் கோரும் கடன் பணத்தை பெற்றுக்கொள்ளும் திறனின் அடிப்படையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளை பெற்று குறைந்த வெட்டுக்களுடன் மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
