இலங்கையில் வறுமை குறைந்ததா! அரசின் புள்ளி விபரங்களில் வெளியான தகவல்கள்
இலங்கையில் வறுமை குறைந்து விட்டதா என்ற கேள்வி இன்று அரசியலிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்படுகின்றது.
உலக வங்கி மற்றும் IMF மதிப்பீடுகளின்படி, நாட்டில் இன்னும் 24% முதல் 25% வரையிலான மக்கள் (சுமார் 53 - 55 இலட்சம் பேர்) வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
2026 ஏப்ரல் மாதத்தின் அதிகாரப்பூர்வ அரசுத் தரவுகளின்படி, ஒரு நபர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதம் ரூ. 17,117 வருமானம் பெற வேண்டும். இதன்படி, 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 68,468 தேவைப்படுகிறது.
இது அடிப்படை வாழ்வாதாரத்திற்கான அளவு மட்டுமே தவிர, வசதியாக வாழ்வதற்கான தொகையல்ல. நகர்ப்புறங்களில் வாடகை, மின்சாரம், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளைக் கணக்கிட்டால் இத்தொகை போதுமானதாக இல்லை.
பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வந்தாலும், 2022 நெருக்கடியின் நீண்டகால தாக்கம், உயர்ந்த வாழ்க்கைச் செலவு, வருமானமின்மை, வரி அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக வறுமை இன்னும் முழுமையாகக் குறையவில்லை.
தற்போது, பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்திருந்தாலும், அதன் பலன்கள் இன்னும் சாமானிய மக்களைச் சென்றடையவில்லை.
2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கையின் வறுமை நிலை குறித்த விரிவான உண்மையான தகவல்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.