தபால் திணைக்களத்தில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் - அரசுக்கு கிடைக்கவுள்ள நன்மைகள்
தபால் திணைக்களம் முழுமையாக நவீனமயப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நகல் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
தனியார் மற்றும் அரச துறைகள் இணைந்த செயற்றிட்டமாக இந்த நவீனப்படுத்தல் செயற்பாடு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரம் கோடி ரூபா செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் தபால்துறை லாபமீட்டும் நிலைக்கு மாற்றியமைக்கப்படும்.
இந்த வருட இறுதிக்குள் தபால் துறையின் நட்டத்தை 300 கோடி ரூபாவால் குறைப்பதற்கும் அடுத்த வருடமளவில் வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளியை சமப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டளவில் தொடர்ந்தும் திறைசேரியில்
தங்கியிருக்காத தபால்துறையை கட்டியெழுப்புவது தமது இலக்காகும் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.