வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த மர்ம பொதிகள்
பிரித்தானியா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட மர்ம பொதிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பொதிகளில் 73,065,000 ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான பொதிகள்
பிரித்தானியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு சந்தேகத்திற்கிடமான பொதிகள் வந்திருந்தன.
தபால் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் தனிப்பட்ட பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தின் தபால் மதிப்பீட்டு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த பொதிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் முன்னிலையில் நேற்று பரிசோதிக்கப்பட்டன.
போதைப்பொருள் கண்டுபிடிப்பு
அந்த சோதனையின் போது, அந்தந்த பார்சல்களில் கவனமாக பொதி செய்யப்பட்ட போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் 921 கிராம் குஷ், 106 கிராம் ஐஸ், ஒரு லிட்டர் Organic Hemp Oil (250 மில்லி x 4 போத்தல்கள்), 5272 மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகள், 2 கிராம் மெண்டி மற்றும் 4 கிராம் ஹஷிஷ் ஆகிய போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக பொருட்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
