பிரித்தானிய மன்னரிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை
எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகம் வாயிலாக இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பக்கிங்ஹாம் மாளிகை
மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என பக்கிங்ஹாம் மாளிகை அண்மையில் அறிவித்திருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருட மாநாட்டில் பிரதான உரையை நிகழ்த்தியவரும் அப்போது இளவரசராக இருந்த சார்ள்ஸ் ஆவார் என ஜனாதிபதி நினைவு கூர்ந்துள்ளார்.
காலநிலை மாற்றம்
இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசராக நோர்வையின் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் ஆறாம் திகதி முதல் நவம்பர் 18ஆம் திகதி குறித்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
