முக்கிய அமைச்சரை வெளியேற்றி விட்டு மந்திராலோசனை நடத்திய ரணில்
அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுன சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் மிக முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
விசேட உரையாற்றுவதற்காக ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பெரமுன கட்சி உறுப்பினர்கள்

இக்கலந்துரையாடலுக்கு பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழு இந்தக் கலந்துரையாடலுக்காக நாடாளுமன்றத்தின் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்தபோது, அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.
வெளியேற்றப்பட்ட பந்துல

அமைச்சர் பந்துல குணவர்தன இல்லாமல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய, ஜனாதிபதியின் அறையிலிருந்து பந்துல குணவர்தனவை வெளியேற்றி விட்டு கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri